மாத இறுதிக்குள் தீர்வு!

04.07.2022 17:18:39

மீனவர்களின் மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு இந்த மாத இறுதியில் நான் தீர்வு பெற்றுக்கொடுப்பேன், இதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " நாடு முழுவதும் எரிபொருள் பிரச்சினை காணப்படுகிறது. எரிபொருள் இல்லாமல் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். போதுமான எரிபொருள் நாட்டில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளது.யார் எல்லை தாண்டி வந்தாலும் அவர்கள் கடல் படையால் கைது செய்யப்படுவார்கள்.இது நீண்டகாலப் பிரச்சினை.இதனை தீர்ப்பதற்கு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது" எனக் குறிப்பிட்டார்.