டிசம்பர் 13ஆம் தேதி மகாதீபம்..!

02.12.2024 08:12:08

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா இன்று தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, டிசம்பர் 13 ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கிய நிலையில், முதல் நாளான இன்று பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இரண்டாம் நாளான நாளை விநாயகர் உற்சவம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, 10 நாள் உற்சவம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கார்த்திகை தீபம் டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நாளில் மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை மலையின்மேல் மகா தீபம் ஏற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகா தீப தரிசனம் 11 நாட்கள் பக்தர்களுக்குப் பொதுமக்களுக்குக் காணலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்த்திகை தீப திருவிழாவில் கலந்து கொள்ள, திருவண்ணாமலைக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.