'கைதி' இந்தி ரீமேக் டீசர் எப்போது..

22.01.2023 01:00:00

கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'போலா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் வருகிற ஜனவரி 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.