கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்
24.11.2021 11:16:35
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடருக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்.
50 சதவீதமான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அதன்படி நடைபெற்று வரும் முதலாவது டெஸ்டின் 4 ஆவது நாளான இன்று முதல் மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
எனினும் தற்போதைய தடுப்பூசி நெறிமுறைகளின்படி, கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
அதனால் பார்வையாளர்கள் தடுப்பூசி அட்டை அல்லது தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம் என்பவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.