
பாகிஸ்தானில் நிலநடுக்கம்!
பாகிஸ்தானில் அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (02) அதிகாலை 2:58 மணிக்கு (IST) 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
பலுசிஸ்தானில் உள்ள உத்தாலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோ மீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் இதுவரை, காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
நிலநடுக்கம் உணரப்பட்டதால் குடியிருப்பாளர்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு, கைபர் பக்துன்க்வாவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன் அதிர்வுகள் ஸ்வாட், சித்ரால் மற்றும் கைபர் பக்துன்க்வாவின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 166 கிலோமீட்டர்களாக பதிவாகியுள்ளது, அதன் மையம் இந்து குஷ் மலைத்தொடரில் அமைந்துள்ளது.