திருவொற்றியூரில் முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் மகன் உருவ படம் திறப்பு- எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

05.08.2023 18:44:50

திருவொற்றியூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே. குப்பன். மோகனின் படத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.குப்பன். இவரது 2-வது மகன் கே.மோகன் கடந்த மாதம் 28-ந்தேதி காலமானார். அவரது உருவ படத்திறப்பு நிகழ்ச்சி இன்று திருவொற்றியூர் ஜீவன்லால் நகரில் உள்ள குப்பன் இல்லத்தில் நடைபெற்றது. மோகனின் படத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், மாதவரம் வி.மூர்த்தி பா.பெஞ்சமின், ரமணா, ஆவடி அப்துல் ரகீம் மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், அலெக்சாண்டர், முன்னாள் எம்.எல்.ஏ. பூந்தமல்லி மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக குப்பன் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அப்போது கவுன்சிலர் கே.கார்த்திக் உட்பட அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர்.