சமன்ரத்நாயக்க நீதிமன்றில் முன்னிலை!

04.03.2024 08:06:07

தரமற்ற மருந்துக்  கொள்வனவு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன்ரத்நாயக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

அத்துடன்  அவர் மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் வழங்கவுள்ளார் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மருந்து கொள்வனவு விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க  குற்றப்பலனாய்வு திணைக்களத்தினரால் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.