சிங்கப்பூரில் இனங்காணப்பட்ட வைரஸ் இந்தியாவில் மூன்றாவது அலையை ஏற்படுத்தும் – கெஜ்ரிவால் எச்சரிக்கை !
19.05.2021 11:59:01
சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய பிறழ்வால் இந்தியாவில் கொரோனா தொற்றின் 3ஆவது அலை வீசக்கூடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்றாவது அலை குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் மிகவும் ஆபத்தாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக சிங்கப்பூருக்கான விமான சேவையை உடனடியாக இரத்து செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநேரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதற்கான நேரம் தற்போது வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.