கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் ட்ரோன் கமரா உதவியுடன் மன்னாரில் கைது

30.05.2021 10:51:13

மன்னாரில் ட்ரோன் கமரா உதவியுடன்  கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேரை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர்.

விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமரா ஊடாக, மன்னார் பகுதிகளில் பொது மக்களின் நடமாட்டத்தை இன்று காலை கண்காணித்துள்ளனர்.

இதன்போது, மன்னாரிலுள்ள மைதானங்களில் இளைஞர்கள் கூடி விளையாடியமை மற்றும்  வீதிகளில் கூடி நின்றமை ஆகியவை ட்ரோன் கமராவின் ஊடாக கண்காணிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு உடனடி விஜயம் மேற்கொண்ட மன்னார் பொலிஸா, அவர்களை கைது செய்து,  வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. .