எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனாவால் காலமானார்!!

12.01.2022 05:30:24

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனாவால் காலமானார். அவருக்கு வயது 60.உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா  இருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.