பாகிஸ்தான் தாக்குதல்களில் 25 பேர் உயிரிழப்பு.

03.09.2025 08:11:57

பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (02) நடந்த மூன்று தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் 14 பேர் இறந்தனர்.

மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள ஒரு மைதானத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்த அந்த வெடிப்பில் பலர் காயமடைந்தனர்.

அங்கு பலூசிஸ்தான் தேசியக் கட்சியின் (BNP) நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கூடியிருந்தனர் என்று பெயர் வெளியிட விரும்பாத இரண்டு மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் குறைந்தது ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரான் எல்லைக்கு அருகில் உள்ள பலூசிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அவர்களின் தளத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் ஆறு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 

பலூசிஸ்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் வளங்கள் நிறைந்த மாகாணமாகும்.

ஆனால் அதன் ஏழ்மையான மாகாணமாகும்.

பாகிஸ்தான் படைகள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மாகாணத்தில் ஒரு கிளர்ச்சியை எதிர்த்துப் போராடி வருகின்றன.

மேலும் 2024 ஆம் ஆண்டில் இப்பகுதியில் வன்முறை உயர்ந்து 782 பேர் கொல்லப்பட்டனர்.

செவ்வாயன்று பலுசிஸ்தானின் வேறு இடங்களில், ஈரானிய எல்லைக்கு அருகிலுள்ள ஒரு மாவட்டத்தின் வழியாக அவர்களின் வாகனத் தொடரணி சென்றபோது வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து துணை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று மூத்த உள்ளூர் அதிகாரி ஒருவர் AFP செய்திச் சேவையிடம் கூறினார்.

எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடியாக எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.