உணவின்றித் தவிக்கும் இராணுவம்

23.11.2021 15:00:00

 இராணுவ முகாம்களில் உள்ள படையினருக்கு நாள் தோறும் வெவ்வேறு உணவுகள் வழங்கப்படுகின்றன. எனினும் கடந்த இரண்டு மாதங்களாக சில இராணுவ முகாம்களுக்கு கோழி இறைச்சி கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக முட்டை மற்றும் கருவாடு என்பன விநியோகிக்கப்பட்டுள்ளதாக நளின் பண்டார குறிப்பிட்டார். 

பாதுகாப்பு அமைச்சர் என்ற நிலையை வகிக்கும் தற்போதைய அரச தலைவர் ஆட்சியின் கீழ் படையினருக்கு உணவு உரியமுறையில் கிடைக்கவில்லை என்பதே முக்கியமான பிரச்சனையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நளின் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

இராணுவ முகாம்களில் பெரும்பாலானோருக்கு உரிய உணவுகள் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் படையினர் போராட்டம் செய்யமுடியாது என்ற நிலையில் இந்த விடயம் குறித்து தேடி பாா்க்கவேண்டும் என்று தெரிவித்தார்.