தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி !

01.04.2021 10:38:05

தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று (வியாழக்கிழமை) கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.

இதற்காக 5 ஆயிரத்து 117 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்தியாவில்  இதுவரை 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.