ராஜமௌலி குறித்து விவரிக்கும் ஜேம்ஸ் கேமரூன்

23.07.2024 07:05:00

இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. கடைசியாக அவர் இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் உலக அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். ஹாலிவுட்டில் மூத்த இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன், ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து பாராட்டினார். மேலும் கடந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் இசைக்காக விருது வென்று புதிய சாதனை படைத்தது. 

மேலும் இவர் இயக்கிய பாகுபலி 2, மற்றும் ஆர்.ஆர்.ஆர். ஆகிய படங்கள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அடுத்ததாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ராஜமௌலி குறித்து மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters) என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படம் தயாரித்துள்ளது. திரைத்துறையில் ராஜமௌலி ஆற்றிய பங்களிப்பை போற்றும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அவருடன் பணியாற்றிய பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் பேசுகின்றனர். மேலும் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பேசுகிறார். இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.