வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் போன அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்!

20.07.2021 21:53:49

அமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் சமல் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச உதயகாந்த குணதிலக ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.