பயண கட்டுப்பாட்டை இலங்கையில் இருந்து வரும் பயணிகளுக்கு நீடித்த நாடு !
20.06.2021 11:30:09
இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் ஜூன் 30 வரை கட்டுப்பாடுகளை நீடித்துள்ளது.
அதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் ஹாரி ரோக் தெரிவித்தார்.
டெல்டா மாறுபாட்டின் தொற்றுகள் பிலிப்பைன்ஸில் பரவுவதை தடுக்கும் நோக்கில் கடுமையான எல்லைக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ஏழு நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஹாரி ரோக் சுட்டிக்காட்டியுள்ளார்.