பிரதமர் நிலைப்பாட்டில் மாற்றம்.

12.06.2026 15:43:14

எதிர்க்கட்சியில் இருக்கும் போது பழைய தேர்தல் முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, தற்போது பழைய தேர்தல் முறையில் தேர்தலில் தேர்தலை நடத்த முடியாது என்று குறிப்பிடுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பழைய முறையோ,புதிய முறையோ எந்த முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை எந்தளவுக்கு உள்ளது என்பதை அறிந்துக் கொள்ளலாம் என மேலும் தெரிவித்தார்.