நினைவுகூரும் உரிமைக்கான உத்தரவாதம் அவசியம்!
புதிய அரசாங்கம் நினைவேந்தலிற்கான உரிமைக்கு இடமளித்திருப்பது நல்லிணக்கச் செயற்பாட்டின் எதிர்காலம் குறித்து சமூகங்களுக்கிடையிலான எதிர்பார்ப்புக்களை வலுவடையச் செய்துள்ளது என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது. |
மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் மேலும்தெரிவித்துள்ளதாவது. இலங்கை கடந்த தசாப்தங்களில் பல்வேறு சமூகங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்க வழிவகுத்த மோதல்களை சந்தித்துள்ளது. இருப்பினும், தங்களது அன்புக்குரியவர்களை நினைவுகூரும் உரிமையானது பலருக்கும் மறுக்கப்பட்டுள்ளது. அர்த்தமுள்ள நல்லிணக்க செயல்முறைகளில் நினைவுகூரும் உரிமைக்கான உத்தரவாதம் அவசியமானதாகும். தற்போதைய புதிய அரசாங்கம் அவ்வாறான நினைவேந்தலுக்கான உரிமைக்கு இடமளித்திருப்பதானது நல்லிணக்கச் செயற்பாட்டின் எதிர்காலம் குறித்து சமூகங்களுக்கிடையிலான எதிர்பார்ப்புக்களை வலுவடையச் செய்துள்ளது |