எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண 35 இலட்சம் ரூபா செலவில் பொருட்கொள்வனவு!

17.01.2022 04:11:03

இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் ஆரம்பித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை 35 இலட்சம் ரூபா செலவில் பிரான்சிலிருந்து கொள்வனவு செய்ய புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.