முசலியில் அரச காணி அபகரிப்பு

17.08.2021 08:46:26

மன்னார்  முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு கிராமத்திற்கு சொந்தமான 14.5 ஏக்கர் அரச காணியை அபகரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று (16) மாலை குறித்த பகுதிக்கு விஜயம் செய்து நிலமையை நேரடியாக அவதானித்தார்.

முசலி பிரதேச காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தரும் அவ் இடத்திற்கு வருகை தந்து இக்காணி அரச காணியாக எல்லை படுத்தப்பட்ட காணி என்பதை உறுதி செய்தனர்.

உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு மருதமடு கிராமத்தில் காணியற்ற மக்களுக்கு உடனடியாக இக் காணிகளை பிரித்து வழங்கும் படி முசலி பிரதேச செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினரால் பரிந்துரை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  •