
கும்கி 2 படத்தின் நாயகன் யார்?
18.09.2025 07:07:00
கடந்த 2012ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கும்கி. பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமான இப்படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடித்தார். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் 2ம் பாகம் தயாராகியுள்ளது. |
இந்த 2ம் பாகம் குறித்து தற்போது ஒரு தகவல் வந்துள்ளது. அறிமுக நடிகர் மதி கதாநாயகனாக நடிக்க அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இவர்களுடன் ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனராம். பெண் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். குழந்தைக்கும், யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் இப்படத்தின் கதை. இயற்கை, மனிதன், யானைகளின் உறவுகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. |