தோணிகளில் கடத்தப்பட்ட கசிப்பு கைப்பற்றப்பட்டது!

08.09.2021 07:50:05

மட்டக்களப்பு ஏறாவூர் பெலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை பிரதேசதத்தில் வாவி ஊடாக தோணிகளில் மொரக்கொட்டாஞ்சேனை பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஒருவரை  செவ்வாய்க்கிழமை   அதிகாலை கைது செய்துள்ளதுடன் ஒருவர் தப்பி ஓடியுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே பண்டார தெரிவித்தார்.

மாவட்ட குற்ற விசாணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலலையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே பண்டார தலைமையிலான பொலிஸார்  செவ்வாய்க்கிழமை  அதிகாலை 3.30 மணிக்கு மொரக்கொட்டாஞ்சேனை வாவி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதனபோது வாவியில் தோணிகள் இரண்டில் இருவர் கசிப்புக்களை கொண்டு வந்து கரை ஒதுங்கியபோது அவர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். இதன்போது ஒருவர் தப்பியோடியுள்ளதாகவும் ஒருவரை 80 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளதுடன் இரண்டு தோணிகளையும் கைப்பற்றியுள்ளனர்.