அர்ச்சுனாவுக்கு பிணை!

30.01.2025 08:11:19

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தனது வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகளைப் பயன்படுத்தியதற்காக தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு இணங்க மறுத்ததை ஒரு வைரல் வீடியோ காட்டுகிறது. மேலும் மோதலின் போது அதிகாரிகளை அவர் திட்டியதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட எம்.பி., பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.