ரணிலின் சிரேஷ்ட ஆலோசகர்களாக இருவர் ..!

28.07.2022 15:00:00

அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர்களாக பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார மற்றும் க்ஷேனுகா செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிபர் ரணில் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதிபரின் சிரேஷ்ட ஆலோசகராக (ஊடகங்கள்) பேராசிரியர் மத்தும பண்டாரவும், சர்வதேச ஊடகங்களுக்கான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகராக க்ஷேனுகா செனவிரத்னவும் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.