ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பிடிக்க தவறிய ஜேர்மனி!

04.06.2026 15:22:35

ஐ.நா பாதுகாப்பு சபை வாக்கெடுப்பில் ஜேர்மனிக்கு போதுமான வாக்குகள் கிடைக்காததால் சபையில் இடம்பிடிக்க தவறியது ஜேர்மனி. வாக்கெடுப்பில் போர்ச்சுகலுக்கு 134 வாக்குகளும், ஆஸ்திரியாவுக்கு 131 வாக்குகளும் கிடைத்த நிலையில், ஜேர்மனிக்கு 104 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆக, போர்ச்சுகல், ஆஸ்திரியாவுடன், ஜிம்பாபே, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளுக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம் கிடைக்க, ஜேர்மனி மட்டும் ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பிடிக்க தவறிவிட்டது.

இந்நிலையில், தங்களுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம் கிடைக்காததற்கு ரஷ்யாதான் காரணம் என ஜேர்மனி கூறியுள்ளது.

தாங்கள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் முன்னிலை வகிப்பதும் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு வைத்துள்ளதுமே தங்களுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம் கிடைக்காததற்கு காரணமாக இருக்கக்கூடும் என ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul தெரிவித்துள்ளார்.

இந்த காரணங்களாலேயே ஜேர்மனிக்கு எதிரான சென்டிமென்டை ரஷ்யா கிளப்பிவிட்டுவிட்டது என்று கூறிய அவர், உக்ரைனுக்கு எங்கள் உறுதியான ஆதரவு உள்ளது, ஆகவே, எங்கள் குரல் ஐ.நா பாதுகாப்பு சபையில் ஒலிப்பதை ரஷ்யா விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார் ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul.