குவைத் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல்!

04.06.2026 15:24:06

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நடந்த ட்ரோன் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெர்மினல் 1 பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 63 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென வானில் இருந்து வந்த ட்ரோன் வெடிகுண்டு விமான நிலையத்தின் பயணிகள் கூடத்தில் வெடித்தது. அப்போது அங்கு நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    

 

தாக்குதல் நடந்தபோது பதிவான சிசிடிவி காட்சிககளை தற்போது குவைத் அரசு வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்குப் பின் விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்த தாக்குதலுக்குப் பின்னால் ஈரான் சார்ந்த குழுக்கள் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குவைத் அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கி வருகிறது.

இந்திய தூதரகம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. காயமடைந்த இந்தியர்களுக்கு தேவையான உதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

இந்த சம்பவம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் உள்ளது.