ஒரே ஆண்டில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.285 உயா்வு

01.09.2021 06:57:41

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.902.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிலிண்டர் ஒன்றின் விலை 875 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக அதிகரித்துள்ளது. 

வணிக அளவில் பயன்படுத்தபப்டும் சமையல் எரிவாயு விலை ரூ.75 உயர்ந்து ரூ.1,831க்கு விற்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.285 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சிலிண்டரின் விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 25 ரூபாய் அதிரடியாக உயர்த்தி மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

மூன்று மாத காலத்திற்கு பின் கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயு விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதமும் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.