சூர்யா படத்திற்கு எதிராக குரல் கொடுத்த சனம் ஷெட்டி!
|
சூர்யாவின் முந்தைய படமான 'கருப்பு' மிகப்பெரிய ஹிட்டாகி இருக்கும் நிலையில், அடுத்து அவர் நடித்து வரும் 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி இந்த படம் தெலுங்கு, தமிழில் திரைக்கு வருகிறது. தற்போது 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'பட்டாம்பூச்சி' வெளியிடப்பட்டிருக்கிறது. |
|
அது பற்றிய போஸ்டர் ஒன்றும் வெளியிட்டிருக்கின்றனர். அதில் ஒரு குறை இருப்பதாக நடிகை சனம் ஷெட்டி குற்றம் சாட்டியிருக்கிறார். "போஸ்டரில் ஹீரோயின் பெயரை குறிப்பிடுவதில் இருந்து எது தடுக்கிறது? எல்லா முக்கிய பெயர்களும் அங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஆனால் ஹீரோயின் பெயர் மட்டும் இல்லை. இது அநியாயம். இந்த ட்ரெண்ட் மாற வேண்டும். மமிதா பைஜு தனது திறமையை நிரூபித்தவர். அதனால்தான் இந்த பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் புதுமுக நடிகையாக இருந்தாலும் சமமான அங்கீகாரம் தரப்பட வேண்டும், சினிமாத்துறை வளர வேண்டும்" என சனம் ஷெட்டி குறிப்பிட்டிருக்கிறார். |