இனவாதத்தால் தழிழர்களுக்கு நன்மையே கிடைக்கும்

16.08.2023 10:38:51

இனவாதத்தால் தழிழர்களுக்கு நன்மையே கிடைக்கும். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் ஊடக சந்திப்பு நேற்று (15) இடம்பெற்ற போதே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் பிரச்சினை பரிமாணத்தை பெற்றுள்ளது இராணுவ ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் நடைபெற்ற மோதல்கள் முடிவுற்ற பிறகும் அதனை தொடர்த்தும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியாத சிங்கள அரசியல் வாதிகள் இனவாதத்தை பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

இலங்கையில் இருந்தும் கூட தமிழர்கள் வேற நாட்டிலும் சிங்களவர்களும் வேற நாட்டிலும் இருப்பது போல் ஒரு விம்பத்தை உருவாக்கிறார்கள். தமிழர்கள் இந்த இலங்கையில் ஒரு திறந்த வெளி சிறைச்சாலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இலங்கையில் இனவாதத்தை வௌிப்படுத்தும் அரசியல் வாதிகளால் தமிழர்களுக்கு நன்மையே கிடைக்கும். என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனி கருத்து தெரிவித்தார்.