பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவை 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும்
உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லீற்றர் பாலுக்கான விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றமை போதுமானதாக இல்லையென பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சுசந்த குமார நவரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் ஒரு லீற்றர் பாலின் விலை 120 ரூபாவரை அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து வெவ்வேறு பகுதிகளில் மாறுபட்ட விலைகளில் பால் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நாடு முழுவதும் ஒரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு மில்கோ மற்றும் பெல்வத்த ஆகிய பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையடுத்து, பால் உற்பத்தியாளர்களுக்கான விலை போதுமானதாக இல்லை என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை வெளிப்படுத்யுள்ளது
இதற்கமைய உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்காக செலுத்தப்படும் விலை லீற்றர் ஒன்றுக்கு 7 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.