இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள் தேவை.

25.07.2025 08:19:48

இந்திய விமானப்படை (IAF), நாட்டின் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்காக 2 முதல் 3 ஸ்குவாட்ரன்கள் (40-60) ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்க திட்டமிட்டுள்ளது. இது, உள்நாட்டில் உருவாகும் AMCA (Advanced Medium Combat Aircraft) திட்டம் தயாராகும் வரை இடைக்கால நடவடிக்கையாக இருக்கிறது. இந்திய விமானப்படை, அரசு முன் சமீபத்தில் தனது எதிர்கால தேவைகள் குறித்த விரிவான விளக்கத்தை வழங்கியது. பாதுகாப்பு செயலாளர் ஆர். கே. சிங் தலைமையிலான குழு, புதிய போர் விமானங்களை கொண்டுவர பரிந்துரை செய்துள்ளது.

இது குறிப்பாக வடக்கு மற்றும் மேற்குக் எல்லைகளில் வலிமையான தடுப்புப் போக்கை உருவாக்கும் நோக்கத்துடன் நடைபெறுகிறது.

அமெரிக்கா அதன் F-35 போர் விமானம், ரஷ்யா தனது Su-57 விமானத்தை இந்தியா வாங்கலாம் என proposal முன்வைத்துள்ளன.

இந்தியா, முன்னதாக ரஷ்யாவுடன் இருந்த FGFA (Fifth Generation Fighter Aircraft) திட்டத்திலிருந்து விலகியிருந்தாலும், அதை மீண்டும் இணைந்து தொடரும் வாய்ப்பும் உள்ளது.

இந்தியாவும் வெளிநாட்டு கூட்டாண்மையில் 114 4.5 தலைமுறை விமானங்களை "Make in India" திட்டத்தில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது அரசு-மக்களுக்கு இடையிலான ஒப்பந்தமாக இருக்கலாம்.

சீனாவின் 6வது தலைமுறை விமானத் திட்டங்கள் முன்னேறும் நிலையில், இந்தியா தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கை மிக முக்கியமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கருதப்படுகிறது.