தாய்லாந்தில் விமான விபத்து!

26.04.2025 09:29:56

தாய்லாந்தில் நேற்று  சிறியரக விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஆறுபேரும் அந்நாட்டுப் பொலிஸ்  அதிகாரிகள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேங்கொக்கிலிருந்து தென்மேற்கே 130 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கடலில் பராசூட் பயிற்சிக்காகச் சோதனை ஓட்டம் மேற்கொண்டபோதே இவ் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப்  அந்நாட்டுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.