நுகர்வுக்கு உதவாத பால்மாக்கள்: 3 களஞ்சியசாலைகளுக்குச் ‘சீல்’

01.09.2021 08:47:45

கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் மனித நுகர்வுக்கு உதவாத பால்மாக்களை களஞ்சியப்படுத்தியிருந்த மூன்று களஞ்சியசாலைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைய குறித்த இடத்தைச் சுற்றிவளைத்த அதிகாரிகள், மூன்று களஞ்சியசாலைகளுக்கும் சீல் வைத்துள்ளனர்.

கொழும்பு வெல்ல வீதி, கதிரேசன் வீதி ஆகிய பகுதிகளிலுள்ள களஞ்சியசாலைகளுக்கே சீல் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த களஞ்சியசாலைகளில் இருந்து புறக்கோட்டையிலுள்ள தொகை வியாபார நிலையங்களுக்குப் பால்மா பைக்கற்றுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மொத்தமாக 1,900 கிலோகிராம் பால்மா பைக்கற்றுக்களுடன் களஞ்சியசாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

களஞ்சியசாலைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்குப் புறக்கோட்டைப் காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.