ரஷ்யாவுக்குள் புகுந்த பிரித்தானிய ஏவுகணை
ரஷ்ய - உக்ரைன் மோதல் தொடக்கத்தின் பின்னர் முதன்முறையாக பிரித்தானிய புயல் நிழல் ஏவுகணைகளை (Storm Shadow) உக்ரைன் ரஷ்யா மீது ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுடனான போரில் ரஷ்யாவின் எல்லையில் 10,000 க்கும் மேற்பட்ட வட கொரிய துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டதற்கு பதிலாக தாக்குதலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
குறித்த விடயமானது, மூன்று ஆண்டுகால மோதலின் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் என பிரித்தானியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்
ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ரஷ்யாவிற்குள் புயல் நிழல் ஏவுகணைகளைப் பயன்படுத்த பிரித்தானியா விரைவில் ஒப்புதல் அளிக்கும் என இதற்கு முன்னதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன
இதன்படி, ரஷ்யாவின் மேரினோ கிராமத்தில் உள்ள கட்டளைத் தலைமையகம் என்று நம்பப்படும் இலக்கை 12 பிரித்தானிய ஏவுகணைகள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தளத்தை வடகொரிய மற்றும் ரஷ்ய அதிகாரிகள் பயன்படுத்தியிருக்கலாம் என உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.