இலங்கை - அவுஸ்திரேலியா முக்கிய பேச்சுவார்த்தை

08.07.2023 15:58:46

எதிர்வரும் ஜூலை மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது கூட்டு வர்த்தக மற்றும் முதலீட்டுக் குழுக் கூட்டங்கள் மற்றும் வெளியுறவு அலுவலக இருதரப்பு ஆலோசனைகளின் 4 ஆவது சுற்று, இரண்டாவது மூலோபாய கடல்சார் உரையாடல் என மூன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெவறவுள்ளன.

வெளிவிவகார அமைச்சின் அலுவலகம்.

வெளியுறவுத் துறையின் முதல் உதவிச் செயலாளர் கேரி கோவன் தலைமை தாங்கி நடத்தவுள்ள இந்தக் கூட்டங்களில், அவுஸ்திரேலியாவின் விவகாரங்கள் மற்றும் வர்த்தகம் இருதரப்பு செயலாளர் யசோஜா குணசேகர மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஷானிகா திஸாநாயக்கவுடன் வெளியுறவுத்துறை, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி. அதபத்து ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதுமாத்திரமன்றி, இந்தக் கூட்டங்களில் அரசியல், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா, விவசாயம், கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு முதலான துறைகள் தொடர்பாக ஆராயவுள்ளதாக தெரிய வருகிறது.

அதாவது மேற்குறித்த துறைகளில் இரு தரப்பு உறவுகளின் ஒத்துழைப்பு மற்றும் அவற்றின் தற்போதைய நிலை என்பன குறித்து இந்தச் சந்திப்புகளில் மதிப்பிடப்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அது மாத்திரமன்றி மேற்கண்ட மூன்று இருதரப்பு பொறிமுறைகளின் முந்தைய அமர்வுகள் செப்டம்பர் 2019 இல் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.