பிரம்மோஸை விட சக்திவாய்ந்த ஏவுகணை K-6!

27.06.2025 07:56:53

பிரம்மோஸை விட சக்திவாய்ந்த K-6 எனும் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளது.தமிழ் செய்தி புத்தகங்கள் இந்தியாவின் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், DRDO உருவாக்கியுள்ள K-6 ஹைப்பர்சோனிக் ஏவுகணை தேசிய பாதுகாப்புக்காக ஒரு பாரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. இது பிரம்மோஸ் ஏவுகணையைவிட வேகமும், தாக்குதல்திறனும் அதிகமானதாகும்.

K-6 ஏவுகணையின் முக்கிய அம்சங்கள்:

வேகம்: மணிக்கு 9,000 கிமீ (Mach 7.5)

தூரம்: 8,000 கிமீ – பாகிஸ்தானின் முழு பரப்பையும் அடையக்கூடியது

வகை: SLBM (Submarine-Launched Ballistic Missile)

தயாரிப்பு: DRDO-வின் Advanced Naval Systems Laboratory, ஹைதராபாத்

செயல்பாடு: நீருக்கடியில் இருக்கும் அணு நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவக்கூடியது

K-6 ஏவுகணை, MIRV (Multiple Independently Targetable Reentry Vehicle) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படுகிறது. இதனால் ஒரே ஏவுகணையால் பல இடங்களை ஒரு நேரத்தில் தாக்க முடியும்.

இது Arihant வகை அணு நீர்மூழ்கிக்கப்பல்களுக்கு அடுத்த கட்டமான S-5 வகை அணு நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படும். இது இந்திய கடற்படைக்கு முழுமையான கடல் வழி தாக்குதல் திறனை வழங்குகிறது. தமிழ் செய்தி புத்தகங்கள்

Agni-5 ICBM ஏவுகணை உடன் இணைந்து, K-6 இந்தியாவின் இரண்டு தளங்களிலிருந்து (நிலம், கடல்) தாக்கும் திறனை உறுதிப்படுத்துகிறது. இது உலகளாவிய பாதுகாப்பு தரத்தில் இந்தியாவை முன்னணியில் கொண்டு வருகிறது