செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது கார்த்தியின் ‘சர்தார் 2’!.

28.06.2026 07:03:36

கார்த்​தி,  2 வேடங்​களில் நடித்து வரவேற்​பைப் பெற்ற படம் ‘சர்தார்’. 

Movies

பி.எஸ்​.மித்​ரன் இயக்​கிய இப்​படத்​தின் அடுத்த பாகம் ‘சர்​தார் 2’ என்ற பெயரில் உரு​வாகி​யுள்​ளது. இதில் மாளவிகா மோக​னன், ஆஷிகா ரங்​க​நாத்,  ரஜிஷா விஜயன், எஸ்​.ஜே.சூர்​யா,  யோகி பாபு உள்பட பலர் நடித்​துள்​ளனர். இதன் படப்​பிடிப்பு எப்​போதோ முடிவடைந்​து​விட்​டது.

 

இந்​நிலை​யில் இப்​படம் செப்​.10-ல் வெளி​யா​வ​தாகப் படக்​குழு அறிவித்​துள்​ளது. இப்​படம் தெலுங்​கிலும் வெளி​யாகிறது. செப்​.11-ல் விஜய தேவர​கொண்​டா,  ராஷ்மிகா நடித்​துள்ள ‘ரண​பாலி’ படம் தமிழ்,  தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளி​யா​வ​தால் பாக்ஸ் ஆபிஸ் போட்டி இருக்​கும் என்​கிறார்​கள்.