தடுப்பூசி செலுத்தலில் இலங்கை புதிய மைல்கல்!
27.10.2021 06:35:49
நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளில், 100 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடுப்பூசி செலுத்தலுக்கு அவசியமான பின்னணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது தேவையான தடுப்பூசியை, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் கலந்துரையாடி, பெற்றுக்கொள்வதற்கான பின்னணி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.