தேசத்தின் தந்தையை நாம் இழந்திருக்கின்றோம்

03.02.2025 08:27:56

தமிழின விடுதலைக்காக அர்ப்பணித்த எமது தேசத்தின் தந்தையை நாம் இழந்திருக்கின்றோம் என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறிதரன் (Sivagnanam Shritharan) தெரிவித்துள்ளார்.

மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் நேசித்த உன்னதாமான பெருந்தலைவரை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய கட்டாயம்

தன்னுடைய வாழ்க்கையின் நீண்ட நெடிய காலத்தினை தமிழ்த் தேசியத்துக்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்த பெருந்தலைவராக சேனாதிராஜா இருக்கின்றார்.

சேனாதிராஜா வகுத்துக்கொண்ட தேசியப்பாதை மிகவும் பெறுமதியானது. அவருடை பாதங்கள் படாத வடக்கு,கிழக்கு பகுதிகள் கிடையாது.

அவர் மக்களுக்காக ஆற்றிய பல தொண்டுகள் மிக முக்கியமாவை. தமிழ்த் தேசிய விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தமிழின விடுதலைக்காக அர்ப்பணித்த எமது தேசத்தின் தந்தையை நாம் இழந்திருக்கின்றோம்.

ஆகவே விடுதலை நோக்கிய அவருடைய இலக்கில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது கட்டமாகின்றது என சிவஞானம் சிறிதரன் (Sivagnanam Shritharan) தெரிவித்துள்ளார்.