
சமூக ஊடக கணக்குகளுக்கு மீண்டும் இந்தியாவில் தடை!
பல முக்கிய பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக ஊடகக் கணக்குகள் இந்தியாவில் இன்று (03) மீண்டும் முடக்கப்பட்டன.
ஹனியா ஆமிர், மஹிரா கான், ஷாஹித் அப்ரிடி, மவ்ரா ஹோகேன் மற்றும் ஃபவாத் கான் போன்ற பாகிஸ்தான் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் கணக்குகள் வியாழக்கிழமை காலை இந்திய பயனர்களால் மீண்டும் அணுக முடியாததாக மாறியது.
புதன்கிழமை பல பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் மீண்டும் செயல்படத் தொடங்கிய ஒரு குறுகிய நேரத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜூலை 2 ஆம் திகதி முதல், சபா கமர், மவ்ரா ஹோகேன், ஃபவாத் கான், ஷாஹித் அஃப்ரிடி, அஹத் ராசா மிர், யும்னா ஜைதி மற்றும் டேனிஷ் தைமூர் உள்ளிட்ட பல பாகிஸ்தான் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்திய பயனர்களுக்காக மீண்டும் அணுகத் தொடங்கின.
இதற்கு மேலதிகமாக, ஹம் டிவி, ஏஆர்ஒய் டிஜிட்டல் மற்றும் ஹர் பால் ஜியோ போன்ற பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களும் மீண்டும் அணுகக்கூடியதாக இருந்தன.
இதையடுத்து மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்த பதட்டங்களைத் தொடர்ந்து, குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, பல கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன.
பல பாகிஸ்தானிய பிரபலங்கள் இந்த நடவடிக்கையை பகிரங்கமாக விமர்சித்தனர்.
அவர்களில் மேற்கண்ட பிரபலங்களும் உள்ளடங்குவர்.