கவினின் ‘பிளடி பெக்கர்’ படுதோல்வி

05.11.2024 07:05:00

தீபாவளி அன்று திரைக்கு வந்த கவின் நடித்த "பிளடி பெக்கர்" என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இந்த படத்தின் தமிழக விநியோகஸ்தருக்கு சுமார் 8 கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறப்படுகிறது.
கவின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘பிளடி பெக்கர்’ என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியான நிலையில், இந்த படத்தை 11 கோடி ரூபாய் கொடுத்து தமிழக ரிலீஸ் உரிமையை 5 ஸ்டார் செந்தில் கைப்பற்றி இருந்தார்.

ஆனால் இந்த படம் மோசமான விமர்சனத்தை பெற்றதன் காரணமாக, பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. இப்போது வரை இந்த படத்திற்கு விநியோகஸ்தருக்கு வெறும் மூன்று கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், சுமார் 8 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே "பார்க்கிங்", "கருடன்", "மகாராஜா" போன்ற படங்களை விநியோகம் செய்து மிகப் பெரிய லாபம் அடைந்த பைவ் ஸ்டார் செந்தில், இந்த படத்தின் மூலம் மோசமான நஷ்டத்தை அடைந்துள்ளார் என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.