டோரதி படத்தின் புது பாடல் ரிலீஸ்!.

25.09.2026 08:16:37

தமிழில் பல திரைப்படங்களை இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்பாராஜ். தற்போது டோரதி என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் சனத், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே ராஜாவின் இசையில் இரண்டு பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘ஒன்ன தொட்டு’ என்கிற பாடலை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

80களில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ஜானி படத்தில் இடம்பெற்ற ‘ஆசைய காத்துல தூது விட்டேன்’  பாடலின் ஸ்டைலில் இந்த பாடலை இளையராஜா உருவாக்கியிருக்கிறார்.

இந்த பாடலைக் கேட்ட இளையராஜாவின் ரசிகர்கள் ‘இதுபோன்ற ஒரு தெளிவான உச்சரிப்பு கொண்ட பாடலை கேட்டு பல வருடங்கள் ஆயிற்று.. அதுதான் இளையராஜா’ என நெகிழ்ந்து வருகிறார்கள்.