ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகளில் சிக்கிய சரக்கு கப்பல்.
|
LPG வாயுவை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்று கண்ணி வெடிகளில் சிக்கி விபத்துக்குள்ளாகி இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. திரவ மயமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு(LPG) டேங்கர்களை ஏற்றிக் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த சரக்கு கப்பல் ஒன்று கடல் கண்ணி வெடிகளில் சிக்கி வெடிப்பு விபத்துக்குள்ளானதாக ஈரான் ராணுவம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. |
|
கண்ணி வெடிகள் வைக்கப்பட்ட ஆபத்தான மற்றும் அனுமதியற்ற கடல் பகுதி வழியாக சரக்கு கப்பல் பயணித்த போது இந்த வெடி விபத்து சம்பவம் அரங்கேறி இருப்பதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்க போர் விமானங்களின் பாதுகாப்புடன் ஆபத்தான இந்த வழித்தடத்தில் பயணிக்க அந்த கப்பல் முடிவு செய்ததே இந்த விபத்திற்கான முக்கிய காரணம் என்று ஈரான் கடற்படை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வழித்தடத்தில் ஏற்கனவே விபத்துக்குள்ளான கப்பல்களின் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் பயணித்ததே இந்த விபத்துக்கான காரணம் என்றும், கடத்தல்காரர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் ராணுவம் ஆகியவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கீழ் இயங்குவதில்லை என்பதையே இந்த பயங்கர வெடிப்பு விபத்து உணர்த்துவதாக ஈரான் ராணுவம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தங்களது வழிசெலுத்தல் அறிவுறுத்தல்களை புறக்கணித்து அனுமதியற்ற வழித்தடத்தில் செல்லும் எந்தவொரு கப்பல்களுக்கும், முன்பு இந்த வழியாக சென்று சேதமடைந்த கப்பல்களின் விளைவுகளையே சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது. |