குஜராத்தின் கேவடியா நகரில் முப்படை தளபதியர் மாநாடு நேற்று ஆரம்பமாகியது.
05.03.2021 07:50:53
குஜராத்தில் நடக்கும் முப்படை தளபதியர் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) உரையாற்றுகிறார்.
குஜராத்தின் நர்மதா மாவட்டம் கேவடியா நகரில் முப்படை தளபதியர் மாநாடு நேற்று ஆரம்பமாகியது.
மூன்று நாட்கள் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் மனித வளங்களை உருவாக்குவதில் உள்ள இடர்ப்பாடுகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.
நாளை இம்மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார். அவருடன் இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளார்.
இம்மாநாட்டில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், இராணுவ தலைமை தளபதி, எம்.எம்.நரவானே, கடற்படை தலைமை தளபதி கரம்பிர் சிங், விமானப் படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.