அரியநேந்திரனிற்கு விளக்கம் கோரி கால அவகாசம்
பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரனிற்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை எனத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை நடைபெற்றுவரவதாகவும் எமது அடிப்படை நிலைப்பாடு வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாகவும், பேசிய விடயங்களையும் கூட்டத்தில் தெரியப்படுத்தியதாகவும் சில முன்னேற்றகரமான கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளதுடன், அவர்களது தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னரே எமது இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.