டெஸ்ட் தொடரைப் பார்வையிட 50 வீதமான பார்வையாளர்களுக்கு அனுமதி !
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரைப் பார்வையிட காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்குள் 50 வீதமான பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நடைபெற்று வரும் முதலாவது டெஸ்டின் 4 ஆவது நாளான இன்று (புதன்கிழமை) முதல் 50 வீதமான பார்வையாளர்கள் மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
எனினும் தற்போதைய தடுப்பூசி நெறிமுறைகளின்படி, கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் 38 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக நேற்று நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.