விறகு வெட்டிக்கொண்டிருந்தவர் உடலமாக மீட்பு!

19.08.2021 05:00:00

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்த நிலையில் திடீரென சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று  காலை  இடம்பெற்றுள்ளது.

வள்ளுவர்புரம் றெட்பானா பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய செனவிரத்தின சமரக்கோன் என்பவரே  உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இவரது உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் இவரது உடலம் பிரேத பரிசோதனைக்காகவும் பி.சி.ஆர். பரிசோதனைக்காவும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை க்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். அத்தோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்