போர் நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் மீது தாக்குதல்.
|
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலை வெள்ளிக்கிழமை லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. |
|
ஹபூஷ் நகரில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிறுவன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். Zrarieh பகுதியில் நடத்திய தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரு தரப்பிற்கு இடையே நடந்த மோதலில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக IDF தெரிவித்துள்ளது. இதன்மூலம் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை உயிரிழந்த இஸ்ரேலிய படையினரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. |