நாடாளுமன்ற நிலைக்குழு மூலம் விசாரணை நடத்த திட்டம் !

22.07.2021 10:38:12

பெகாசஸ் மென்பொருள் மூலமாக இந்தியாவைச் சேரந்த முக்கிய அரசியல் பிரமுகர்களின் தொலைப்பேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனத் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ என்ற நிறுவனம்  தயாரித்திருக்கும் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரலங்களின் தொலைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பேச்சுபொருளாக மாறியது. இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்களாக முடங்கின.

இதனையடுத்து இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.