சுவிட்சர்லாந்து முடக்கியுள்ள சொத்துக்கள்!
சிரியா தொடர்புடைய சுமார் 112 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சொத்துக்களை சுவிட்சர்லாந்து முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 112 மில்லியன் டொலர் அல்லது இந்திய மதிப்பில் ரூ 950 கோடி சொத்துக்களில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக முடக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் சுவிஸ் அரசாங்கம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. |
மே 2011ல் சிரியாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை சுவிட்சர்லாந்து ஏற்றுக்கொண்டதிலிருந்து மொத்தத்தில் பெரும்பகுதி முடக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து இந்த வாரம் சிரியா தொடர்பான பொருளாதாரத் தடைகள் பட்டியலில் மேலும் மூன்று பேரைச் சேர்த்துள்ளது. சுவிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தற்போது 318 தனிநபர்கள் மற்றும் 87 நிறுவனங்கள் தடைகள் பட்டியலில் உள்ளன என குறிப்பிட்டுள்ளார். ஆனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சொத்துக்களை சுவிட்சர்லாந்து முடக்கியிருக்கிறதா என்ற கேள்விக்கு அவர் பதில் கூற மறுத்துள்ளார். சுவிஸ் நிதி நிறுவனங்கள் ஒருமுறை 130 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (147 மில்லியன் அமெரிக்க டொலர்) மதிப்புள்ள சிரிய சொத்துக்களை முடக்கி வைத்திருந்ததாக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |